கஞ்சாவுடன் வாலிபர் கைது

கஞ்சாவுடன் வாலிபர் கைது

Update: 2022-07-27 18:49 GMT

ராமநாதபுரம் நகர் இன்ஸ்பெக்டர் மலைசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சகாயராணி மற்றும் போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரின் சக்கரக்கோட்டை முனீஸ்வரன் கோவில் அருகே ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் தப்ப முயன்ற வாலிபரை பிடித்து சோதனையிட்டபோது அவர் வைத்திருந்த பையில் 1 கிலோ 300 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக ராமநாதபுரம் எம்.எஸ்.கே. நகரை சேர்ந்தவரும் தற்போது சித்தார்கோட்டை ஜமீந்தார்வலசை பகுதியி வசித்து வருபவருமான கார்த்திக் என்ற சம்பவம் கார்த்திக் (வயது25) என்பவரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்