மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

மேல் விஷாரத்தில் மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-04 17:30 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் அன்சா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சலீம் (வயது 21). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஹவமா. 2-வது பிரசவத்திற்காக ஹவமா தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். சலீமிற்கு அவரது உறவினர் தினமும் சாப்பாடு வழங்கி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சலீமிற்கு உறவினரின் மகளான 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி சாப்பாடு கொண்டு வந்து கொடுத்துள்ளார். அப்போது சலீம் அந்த மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதை வெளியே சொன்னால் உன் குடும்பத்தை அசிங்கப்படுத்தி விடுவேன் என மிரட்டி உள்ளார்.

அதன்பிறகும் தொடர்ந்து அந்த மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனால் அந்த சிறுமி 5 மாத கர்ப்பமானார். இதுகுறித்து பெற்றோர் மாணவியிடம் விசாரித்த போது, தனக்கு ஏற்பட்ட கொடுமையை கூறி கதறி அழுதார்.

இது குறித்து மாணவியின் பெற்றோர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சலீமை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்