வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

வள்ளியூர் அருகே வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-27 19:39 GMT

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் அருகே கண்ணநல்லூர் தாமரைக்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 20). இவர் 16 வயது சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்