போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-09-23 18:45 GMT

வெளிப்பாளையம்:

வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரம் ராமர் மடத்தெருவை சேர்ந்த குணசேகரன் மகன் ரமேஷ்குமார் (வயது25). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று 10 வயது சிறுமியை வாயை பொத்தி தூக்கி சென்று பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். இதனால் அந்த சிறுமி சத்தம் போட்டுள்ளார். இந்த சத்தம் கேட்டு பொதுமக்கள் வந்ததால் அங்கிருந்து ரமேஷ்குமார் தப்பி ஓடி விட்டார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்