போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

நெல்லை அருகே போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-09-23 20:59 GMT

முக்கூடல் அருகே வடக்கு அரிநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் மாரிசெல்வம் என்ற ராஜா (வயது 26). இவர் சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி அழைத்து சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் முக்கூடல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், சுத்தமல்லி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னபூரணி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மாரிசெல்வத்தை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்