குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது
கஞ்சாவிற்ற வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அரக்கோணம்
அரக்கோணம் அடுத்த சாலை கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் துரைசாமி (வயது 20). இவர் சாலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். அதன்பேரில் அரக்கோணம் தாலுகா போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் துரைசாமியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.