தட்டார்மடம் அருகே திருட்டு வழக்குகளில் வாலிபர் கைது- 8 பவுன் நகை மீட்பு

தட்டார்மடம் அருகே, திருட்டு வழக்குகளில் வாலிபரை கைது செய்த போலீசார் 8 பவுன் நகைகளை மீட்டனர்

Update: 2022-07-24 14:50 GMT

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே, திருட்டு வழக்குகளில் வாலிபரை கைது செய்த போலீசார் 8 பவுன் நகைகளை மீட்டனர்.

நகை பறிப்பு

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடைச்சிவிளை நல்லம்மாள்புரம் பகுதியை சேர்ந்த தவசிமணி மனைவி தாமரைபுஷ்பம் (வயது 65). இவர் கடந்த மே மாதம் 25-ந்தேதி இரவு அவரது வீட்டின் முன்பு படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரது கழுத்தில் இருந்த மூன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்து தாமரைபுஷ்பம் அளித்த புகாரின் பேரில் தட்டார்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில், சாத்தான்குளம் துணை சூப்பிரண்டு அருள் மேற்பார்வையில், தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் தலைமையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் கிறிஸ்துராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி திருடனை தேடி வந்தனர்.

கைது

இந்த நிலையில் நகை பறிப்பு தொடர்பாக இடைச்சிவிளை பகுதிைய சேர்ந்த திருமால்கரன் மகன் பிரபாகரன் (35) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், மேலும் பல இடங்களில் நகை திருடியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து 8 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்