கோவில் தேரோட்டத்தில் தகராறு; வாலிபர் கைது

மதுக்கூா் அருகே கோவில் தேரோட்டத்தில் தகராறு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

Update: 2023-05-09 20:18 GMT

மதுக்கூர்;

மதுக்கூர் வடக்கு முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தில் மதுக்கூர் படப்பைக்காட்டை சேர்ந்த பந்துலு மகன் நிஜேந்தன்(வயது20) கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் நிஜேந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்