கொலை வழக்கில் வாலிபர் கைது

பாணாவரம் அருகே நடந்த கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-09-15 19:17 GMT

பாணாவரத்தை அடுத்த கூத்தம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மகன் சரத்குமார் (வயது 21). இவர் கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் சிறை சென்று ஜாமீனில் வெளியே வந்த இவரை கடந்த ஒரு ஆண்டுக்கு முன் 8 பேர் கொண்ட கும்பல் தங்களை போலீசார் என்று கூறி அவரை அழைத்து சென்று மாலையமேடு பகுதியில் கை, கால்களை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்தனர்.

இது தொடர்பாக பாணாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். பாராஞ்சி கிராமத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (28) என்பவர் தலைமறைவாக இருந்துவந்தார். இவரை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் பகுதியில் உள்ள கல் குவாரியில் பதுங்கி இருந்த அவரை பாணாவரம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்