மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் வாலிபர் கைது

மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-09-23 12:36 GMT

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த கருநீலம் ஊராட்சிக்கு உட்பட்ட கரும்பூர் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 33). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தி்ல் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 20-ந் தேதி சிங்கப்பெருமாள் கோவில் ரெயில் நிலைய வாகன நிறுத்தம் இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார். பின்னர் வேலை முடித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து மறைமலைநகர் போலீசில் வெங்கடேசன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிய வழக்கில் குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த அஜித்குமார் (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்