குட்கா பறிமுதல் வழக்கில் வாலிபர் கைது
நாட்டறம்பள்ளி பகுதியில் குட்கா பறிமுதல் வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தாலுகா, ஆத்தூர்குப்பம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான குடோன் உள்ளது.
இந்த குடோனை கேத்தாண்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜு என்ற பூவரசன் என்பவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பிளாஸ்டிக் பொருட்களை வைத்து விற்பனை செய்வதாக வாடகைக்கு எடுத்துள்ளார்.
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜானுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி வாணியம்பாடி இன்ஸ்பெக்டர் நாகராஜ், நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் குடோனின் பூட்டை உடைத்து சோதனை செய்தனர்.
அப்போது குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான பான்மசாலா மற்றும் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து நாட்டறம்பள்ளி இன்ஸ்பெக்டர் மலர் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் அண்ணன்-தம்பிகளான பூவரசன், பொன்னுரசன் (வயது 25) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவுசெய்தனர்.
இதில் பொன்னுரசனை போலீசார் கைது செய்தனர். பூவரசனை தேடி வருகின்றனர்.