சிறுமியை கடத்திய வாலிபர் கைது

நாங்குநேரி அருகே சிறுமியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-21 18:45 GMT

களக்காடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, நாங்குநேரி அருகே ஒரு தனியார் ஆலையில் வேலைக்கு சேர்ந்து அங்குள்ள விடுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 18-ந் தேதி விடுதியில் இருந்த சிறுமி திடீரென மாயமானார். இதுபற்றி அதன் மேலாளர் களக்காட்டில் உள்ள பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி எங்கு சென்றார் என்ற தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி சிறுமியைக் மீட்டனர். சிறுமியை கடத்தியதாக தென்காசி மாவட்டம் ராமசந்திரபட்டிணத்தைச் சேர்ந்த சுரேஷ் (வயது 27) என்ற வாலிபரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்