குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

முன்னீர்பள்ளம் அருகே குண்டர் சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-19 20:18 GMT

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் கீழமுன்னீர்பள்ளம் தெப்பகுளம் தெருவை சேர்ந்த அருணாசலம் (வயது 24) என்பவரை கைது செய்தனர். அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதனை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் ஏற்று அருணாசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அதற்கான ஆணையை முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் நேற்று பாளையங்கோட்டை மத்தியசிறையில் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்