குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-12 19:00 GMT

புளியங்குடி:

புளியங்குடி அருகே உள்ள தாருகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவர் மீது புளியங்குடி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனைத் தொடர்ந்து அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சாம்சனிடம், துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பரிந்துரை செய்தனர். அவர், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் துரை ரவிச்சந்திரன், குண்டர் சட்டத்தில் மணிகண்டனை கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் மணிகண்டனை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்