குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

கூடலூரில் குண்டர் சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-01-06 18:45 GMT

கூடலூர் எம்.ஜி.ஆர். காலனியைச் சேர்ந்தவர் லெனின் (வயது 35). இவர் மீது கந்துவட்டி தடை சட்டத்தின் கீழ் கூடலூர் போலீஸ் நிலையங்களில் 3 வழக்குகள், 7 இதர வழக்குகள் உள்ளன. இதனைத் தொடர்ந்து மீண்டும் கந்துவட்டி வசூலிக்க கூடாது என போலீசார் அவருக்கு அறிவுறுத்தி இருந்தனர். இந்நிலையில் அவர், நேரு என்பவரிடம் மீண்டும் வட்டி பணம் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லெனினை கைது செய்து தேனி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் லெனினை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் லெனின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்