குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

Update: 2022-09-09 19:44 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை அருகே வெளிப்பட்டினம் பாலசுப்பிரமணியசாமி கோவில் கிழக்கு ரதவீதியை சேர்ந்தவர் மோகன். இவருடைய மகன் முருகதாஸ் (வயது37). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டியன் பரிந்துரையின்பேரில் தஞ்சை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் தாக்கல் செய்தார். இந்த ஆவணங்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பரிசீலனை செய்து முருகதாசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதன்படி முருகதாசை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்