குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-29 21:17 GMT

தஞ்சை வடக்குவாசல் கீழ்லைன் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் பச்சைகிளி என்கிற சூர்யகுமார் (வயது23). இவர் மீது கஞ்சா வழக்கு உள்ளது. இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் பரிந்துரையின்பேரில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் தாக்கல் செய்தார். இந்த ஆவணங்களை கலெக்டர் தீபக் ஜேக்கப் பரிசீலனை செய்து சூர்யகுமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதன்படி சூர்யகுமார் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்