குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-29 20:00 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மாரநாடு பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (வயது 38). இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில், இவர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில் இளையராஜாவை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்