குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்
சிவகங்கையை அடுத்த வைரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுகுமார் (வயது 26). இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். கடந்த ஜனவரி மாதம் ஒரு கிராவல் குவாரியில் இருந்த மண் அள்ளும் வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக இவரை சிவகங்கை தாலுகா போலீசார் கைது செய்தனர். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் சுகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து சுகுமாரை குண்டா் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.