குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
தஞ்சை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர்;
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா சாக்கோட்டை கீழத்தெருவை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மகன் வினோத்குமார் (வயது28). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் பரிந்துரையின்பேரில் நாச்சியார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாராணி வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் தாக்கல் செய்தார். இந்த ஆவணங்களை கலெக்டர் தீபக் ஜேக்கப் பரிசீலனை செய்து வினோத்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதன்படி வினோத்குமாரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.