குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-08-19 19:00 GMT

நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை கீழத்தெருவை சேர்ந்த மாரிமுத்து மகன் பாஸ்கர் (வயது 23). இவர் நெல்லை மாநகர பகுதியில் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் துணை கமிஷனர் அனிதா, உதவி கமிஷனர் பிரதீப் ஆகியோர் பரிந்துரை செய்தனர். நெல்லை சரக டி.ஐ.ஜி.யும், மாநகர போலீஸ் கமிஷனருமான (கூடுதல் முழுபொறுப்பு) பிரவேஷ்குமார் இதனை ஏற்று பாஸ்கரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் நேற்று பாஸ்கரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்