விவசாயி கொலை வழக்கில் வாலிபர் கைது

தென்காசியில் நடந்த விவசாயி கொலை வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-10-30 18:45 GMT

தென்காசியில் நடந்த விவசாயி கொலை வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விவசாயி கொலை

தென்காசி எல்.ஆர்.எஸ். பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் முருகன் (வயது 41). விவசாயியான இவர் கடந்த 25-ந் தேதி இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

சொத்து தகராறு காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான வெங்கடேஷ் என்பவர் அவரை கொலை செய்து விட்டு ஓடிவிட்டதாக முதலில் கூறப்பட்டது.

இந்த நிலையில் தன்னை போலீஸ் தேடுவதாக கூறி வெங்கடேஷ் கடந்த 27-ந் தேதி ஆண்டிப்பட்டி கோர்ட்டில் சரண் அடைந்தார்.

வாலிபர் கைது

இந்த கொலை வழக்கில் வெங்கடேசின் நெருங்கிய நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த மகாராஜன் (26) என்பவரை தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், வெங்கடேஷ் தனக்கு நெருங்கிய நண்பர் என்றும், அவருக்கு பாதிப்பு ஏற்பட்டதால் அவருடன் சேர்ந்து இந்த கொலையை செய்ததாகவும் கூறியுள்ளார்.

கைதான மகாராஜனை போலீசார் தென்காசி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்