பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் கைது

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-27 20:01 GMT

திருச்சி மாவட்டம், நவல்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து உள்ளிட்ட போலீசார் நேற்று மணிகண்டம் அருகே திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆலம்பட்டி பிரிவு ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை தடுத்து நிறுத்தி, அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை மணிகண்டம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் திருவானைக்காவல் பாரதி தெருவை சேர்ந்த முத்துக்குமாரின் மகன் ரெங்கன் என்ற ரெங்கநாதன் (வயது 25) என்பதும், அவர் மீது ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், சமயபுரம், மணிகண்டம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட 19 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. மேலும் கடந்த மாதம் 16-ந் தேதி மணிகண்டம் ஆலம்பட்டி பிரிவு ரோடு அருகே ஜெகதீசன்(28) ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற சம்பவத்தில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து ரெங்கநாதனை கைது செய்த போலீசார் அவரை திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண்-4 கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்