மோகனூர் அருகேநகை திருட்டு வழக்கில் வாலிபர் கைது

Update: 2023-09-02 18:45 GMT

மோகனூர் அருகே உள்ள எம்.ராசாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செங்கோடன். இவரது மனைவி பாவாயி (வயது57). செங்கோடன் இறந்து விட்ட நிலையில், பாவாயி தனியாக வசித்து வந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 12-ந் தேதி இரவு இவரது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் 10 பவுன் நகைகளை திருடி சென்றனர்.

இது தொடர்பாக பாவாயி மோகனூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சதீஷ்குமார் (31) என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளார். இந்தநிலையில் நாமக்கல் வீனஸ்காலனியை சேர்ந்த மணிபாரதி (24) என்பவரை போலீசார் தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த அவர் நேற்று கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்