வடசேரி பஸ் நிலையத்தில் தொழிலாளியிடம் பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது

வடசேரி பஸ் நிலையத்தில் தொழிலாளியிடம் பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-28 21:02 GMT

நாகர்கோவில்:

வடசேரி பஸ் நிலையத்தில் தொழிலாளியிடம் பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது54), தொழிலாளி. இவர் நேற்று காலையில் வடசேரி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்த அஜித்ராஜ் (21) மது குடிப்பதற்கு மணிகண்டனிடம் பணம் கேட்டார். அவர் பணம் கொடுக்க மறுத்ததால், கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து பணம் பறிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அருகில் நின்றவர்கள் கூடினர். உடனே அஜித்ராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின்போில் வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் புத்தேரி பகுதியில் வைத்து அஜித்ராஜை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்