பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது

நெல்லையில் பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-28 19:42 GMT

நெல்லை தச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் மகன் சதீஷ் (வயது 34). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று ஒரு பகுதியில் நின்று கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு வந்த நெல்லை சந்திப்பு சி.என்.கிராமம் மேலத்தெருவை சேர்ந்த பெருமாள் மகன் சுடலைகண்ணு (27) என்பவர் சதீசிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுத்ததால் அவரை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சதீஷ் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுவாதிகா வழக்குப்பதிவு செய்து சுடலைகண்ணுவை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்