பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது

தூத்துக்குடி அருகே முத்தையாபுரத்தில் பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-02 18:45 GMT

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் தங்கமணிநகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் ராமஜெயம். இவரது மகன் பார்த்திபன் (வயது 21) ஓட்டல் தொழிலாளி. இவர் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த, அதே பகுதியைச் சேர்ந்த பூமி ராஜன் மகன் விஜயராகவன் என்ற லாசர் டேவிட் (22), பார்த்திபனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வரவே லாசர் டேவிட் ஆத்திரத்தில் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து, அங்கிருந்து தப்பிச்சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயராகவன் என்ற லாசர் டேவிட்டை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்