தாயை கொன்ற வழக்கில் சாட்சி சொல்ல வந்த தந்தை-தங்கையை மிரட்டிய வாலிபர் கைது

தாயை கொன்ற வழக்கில் சாட்சி சொல்ல வந்த தந்தை-தங்கையை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-20 09:09 GMT

சென்னை வேளச்சேரி நேருநகர் திரு.வி.க தெருவில் வசித்து வந்தவர் லட்சுமி (வயது 50). இவரது மகன் மூர்த்தி (30). குடிபோதைக்கு அடிமையான இவர், கடந்த 19-09-2021 அன்று இரவு தனக்கு சாப்பாடு இல்லை என்று கூறிய தனது தாய் லட்சுமியை அறுவாமனையால் வெட்டிக்கொன்றார். இது தொடர்பாக வேளச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து மூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு அல்லிக்குளம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

கொலையை நேரில் பார்த்த சாட்சிகளான மூர்த்தியின் தந்தை ராமலிங்கம் (57), தங்கை செல்வி (30) ஆகிய இருவரும் கோர்ட்டில் விசாரணைக்கு சென்றனர். இதையறிந்த மூர்த்தி, செல்போனில் தொடர்பு கொண்டு எனக்கு எதிராக சாட்சி சொல்ல செல்கிறீர்களா? என கேட்டு தந்தை மற்றும் தங்கைக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக அல்லிக்குளம் நீதிமன்ற நீதிபதி முகமது பாருக்கிடம் இருவரும் முறையிட்டனர்.

இது தொடர்பாக அல்லிக்குளம் கோர்ட்டில் இருந்து வேளச்சேரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வேளச்சேரி போலீசார் மூர்த்தி மீது கொலை மிரட்டல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்