மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளாா். அவரிடம் இருந்து 20 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

Update: 2023-02-27 18:45 GMT


மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளாா். அவரிடம் இருந்து 20 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

மோட்டார் சைக்கிள் மாயம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தோப்பு தெருவை சேர்ந்தவர் குஞ்சிதபாதம். இவருைடய மகன் கணேசன் (வயது 36). இவர் கடந்த 9-ம் தேதி மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரை பார்க்க சென்றார்.

அப்போது அரசு ஆஸ்பத்திரி முன்பு நிறுத்தப்பட்டிருந்த கணேசனின் மோட்டார் சைக்கிள் மாயமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த கணேசன் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

தேடுதல் வேட்ைட

மேலும் கடந்த 11-ம் தேதி மயிலாடுதுறை திருவிழந்தூர் வடக்கு வீதியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் கனகராஜ் (34) தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த அவரது மோட்டார் சைக்கிள் காணாமல் போனது. இதைப்போல மயிலாடுதுறை நகரம் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் மாயமானது. இது குறித்து மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து போலீசாருக்கு புகார் வந்தது.

இதைத்தொடா்ந்து சப் - இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்களை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

கைது

மேலும் தனிப்படை போலீசாா் மோட்டாா் சைக்கிள் திருட்டு நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

மேலும் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மோட்டாா் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவா் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார்- கீழையூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் மகன் சதீஷ்குமார் (28) என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சதீஷ்குமாரை கைது செய்து அவரிடம் இருந்து 20 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்