மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது
வையம்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வையம்பட்டி, ஆக.20-
வையம்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
திருச்சி மாவட்டம், வையம்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு அடிக்கடி நடைபெற்றது. எனவே இந்த திருட்டில் ஈடுபட்ட ஆசாமிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்நிலையில் வையம்பட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வினோத் தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போது கவரப்பட்டியைச் சேர்ந்த காளிதாஸ் (வயது 21) என்றும், அவர் வந்த மோட்டார் சைக்கிள் திருட்டு மோட்டார் சைக்கிள் என தெரியவந்தது.
கைது
மேலும் இவர் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து 7 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.