மோட்டார் சைக்கிள், பணத்தைபறித்து சென்ற வாலிபர் கைது

மோட்டார் சைக்கிள், பணத்தைபறித்து சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-14 19:09 GMT

திருச்சி பாலக்கரை காஜாபேட்டை பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 38). சம்பவத்தன்று இரவு இவர் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, அவர் சட்டை பையில் இருந்து ரூ1,000-த்தை பறித்துக்கொண்டதுடன், மோட்டார் சைக்கிளையும் பறித்துக்கொண்டு சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது, நாமக்கல் மோகனூர் பகுதியை சேர்ந்த ஆனந்தன் (32) என்பதும் இவர் மீது ஏற்கனவே 6 மோட்டார் சைக்கிள்களை திருடியதாக மாநகர போலீஸ் நிலையங்களில் வழக்குகள் இருப்பதும், நேற்று முன்தினம் மற்றொரு மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்