மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீசார் வாகன சோதனை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பெரியார் நகர் மணியம்மை தெருவை சேர்ந்தவர் சக்தி (வயது 40). இவரது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில் ஆரணி நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் ஆரணி-போளூர் நெடுஞ்சாலையில் முள்ளிப்பட்டு ஹவுசிங் போர்டு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
வாலிபர் கைது
விசாரணையில், களம்பூரை அடுத்த வடமாதிமங்கலம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் சக்திவேல் (21) என்பதும், திருமண மண்டபங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் போது சப்ளையராக வேலை செய்வதும் தெரியவந்தது. மேலும் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிளை திருடி, குறைந்த விலைக்கு விற்று அதன் மூலம் வரும் பணத்தை கொண்டு ஜாலியாக வாழ்ந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் 10 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.