மோட்டார்சைக்கிள் திருடிய வாலிபர் கைது
கொள்ளிடம் அருகே மோட்டார்சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்;
கொள்ளிடம்:
மயிலாடுதுறை அருகே சோழசக்கர நல்லூர் கிராமத்தை சேர்ந்த அசரப்அலி மகன் ரஷீத்அலி (வயது24). இவர், கொள்ளிடம் மற்றும் சீர்காழி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை திருடி விற்று வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கொள்ளிடம் அருகே தைக்கால் கடைவீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒருவரின் மோட்டார் சைக்கிளை திருடி சென்று விட்டார். இதனை கண்காணித்த கொள்ளிடம் போலீசார் அவரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இந்தநிலையில் ஓசூர் பகுதியில் ரஷீத்அலி பதுக்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்து, அவரிடம் இருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கொள்ளிடம் மற்றும் சீர்காழி பகுதியில் 7 மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரியவந்தது.