சேலம் சுந்தர் லாட்ஜ் அருகே அஸ்தம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் அவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே விராலிபட்டி பகுதியை சேர்ந்த ராமர் (வயது 26) என்பதும், அஸ்தம்பட்டி பகுதியில் ஒருவரது வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.