மொபட் திருடிய வாலிபர் கைது

மொபட் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-15 19:47 GMT

பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 25). தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் குலவணிகர்புரம் ரெயில்வே கேட் அருகே மொபட்டில் சென்று கொண்டு இருந்தாா். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் கதிரேசனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவரை பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு போலீசார் நடத்திய விசாரணையில் நேற்று முன்தினம் இரவு பாளையங்கோட்டை கோபாலசாமி கோவில் முன்பு நிறுத்தப்பட்ட மொபட்டை கதிரேசன் திருடிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவரை, போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்