வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது
வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பாளையங்கோட்டை தியாகராஜநகர் 4-வது தெருவை சேர்ந்தவர் ஜான் ஜெபதாஸ் (வயது 50). இவர் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டிட வேலை நடந்தது. அப்போது அந்த பணியில் இருந்த தருவை பகுதியை சேர்ந்த குணசேகர் மகன் வடிவேந்தன் (24) என்பவர் வீட்டில் பீரோவில் இருந்த சுமார் 3 பவுன் தங்க நகைகள் மற்றும் செல்போனை திருடி சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜான் ஜெபதாஸ் பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேந்தனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.