வீடு புகுந்து நகை, பணம் திருடிய வாலிபர் கைது
அனந்தபுரத்தில் வீடு புகுந்து நகை, பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அனந்தபுரம்,
செஞ்சி அடுத்த அனந்தபுரம் உமையாள்புரம் பகுதியை சேர்ந்தவர் தயாளன் மகன் வேல்முருகன் (வயது 34). இருசக்கர வாகன மெக்கானிக்கான இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றுவிட்டார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ஒரு பவுன் நகை, 350 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.25 ஆயிரத்தை திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே ஊரை சேர்ந்த நடராசன் மகன் அய்யப்பன் (21) என்பவர், வேல்முருகனின் வீட்டில் புகுந்து திருடியது தெரியவந்தது. இதையடுத்து அய்யப்பன் கைது செய்யப்பட்டார்.