கோவிலில் நகை திருடிய வாலிபர் கைது

கோவிலில் நகை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்

Update: 2022-08-16 21:06 GMT

தஞ்சையை அடுத்துள்ள வல்லம் - திருச்சி சாலையில் ஆலமரம் அருகே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.சம்பவத்தன்று மாலை இ்ந்த கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் தரிசனம் செய்வது போல் உள்ளே சென்று அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தங்கத்தால் ஆன பொட்டு தாலியை அறுத்து கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் வேகமாக ஓடினார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அந்த வாலிபரை துரத்தி சென்றனர். ஆனால் அவர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து வல்லம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வல்லம் ஏகவுரியம்மன் கோவில் அருகே நின்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கரூரை சேர்ந்த செல்லதுரை(வயது28) என்பதும் அவர் அம்மன் கழுத்தில் இருந்து நகையை பறித்து சென்றதும் தெரியவந்தது. இதன்பேரில் போலீசார் செல்லத்துரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.





Tags:    

மேலும் செய்திகள்