மோட்டார் சைக்கிளில் ஆடுகளை திருடிய வாலிபர் கைது

கறம்பக்குடி அருகே மோட்டார் சைக்கிளில் ஆடுகளை திருடியவாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-12-24 19:12 GMT

ஆடுகள் திருட்டு

கறம்பக்குடி அருகே உள்ள கருப்பக்கோன் தெருவை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 40), விவசாயி. இவரது வீட்டில் கட்டப்பட்டிருந்த 3 ஆடுகளை நேற்று அதிகாலை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இது குறித்து அவர் கறம்பக்குடி போலீசில் புகார் கொடுத்தார்.

இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை கறம்பக்குடி பகுதியில் போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தபோது சுக்கிரன் விடுதி அருகே ஒரு மோட்டார் சைக்கிளில் ஆடுகளுடன் 3 பேர் செல்வதை பார்த்து அவர்களை மடக்கி பிடிக்க முயன்றனர்.

கைது

இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் கீழே குதித்து தப்பி ஓடிவிட்டனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் தஞ்சாவூர் மாவட்டம் நெய்வேலி வண்ணான் கொல்லை கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் (22) என்பதும் அவர் நண்பர்களுடன் சேர்ந்து ஆடுகள் திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் 3 ஆடுகள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்