புஞ்சைபுளியம்பட்டி விண்ணப்பள்ளி அரசு மறுவாழ்வு இல்லம் அருகே உள்ள தோட்டத்தில் வசித்து வருபவர் மாணிக்கம் (வயது 53) விவசாயி. இவர் தன்னுடைய தோட்டத்தில் 5 ஆடுகளை வளர்த்து வருகிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவருடைய தோட்டத்துக்கு வந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ஆடு ஒன்றை திருடி மொபட்டில் ஏற்றிக்கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி விண்ணப்பள்ளி கோபிக்காரர் தோட்டத்தை சேர்ந்த கலைவாணன் (30) என்பவரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடையை 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.