தக்கலை அருகே ரப்பர் தோட்டத்தில் திருடிய வாலிபர் கைது
தக்கலை அருகே ரப்பர் தோட்டத்தில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தக்கலை:
தக்கலை அருகே உள்ள முண்டவிளை பகுதியை சேர்ந்தவர் தாஸ் (வயது 67), விவசாயியான இவருக்கு குமாரபுரம் அருகில் உள்ள ஏழானை பொற்றையில் ரப்பர் தோட்டம் உள்ளது. இங்கு நேற்று காலை 6 மணிக்கு கூழக்கடையை சேர்ந்த தங்கம் மகன் டினோ (19) என்பவர் ஒரு ஆட்டோவில் வந்தார். ஆட்டோவை சதீஸ்குமார் ஓட்டினார்.
பின்னர் ரப்பர்ஷீட் அடிக்கும் எந்திரத்தில் உள்ள 2 இரும்பு சக்கரங்களை கழற்றி ஆட்டோவில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனை கவனித்த தொழிலாளர்கள் சத்தம் போட்டனர். உடனே டினோ பொருட்களை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு தப்பி விட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கொற்றிக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்த நிலையில் டினோவை அழகியமண்டபத்தில் போலீசார் மடக்கினர். பின்னர் அவரை கைது செய்து எந்திரங்களை மீட்டனர்.