வீடுகளில் திருடிய வாலிபர் கைது
மூலைக்கரைப்பட்டி அருகே வீடுகளில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி அருகே சிந்தாமணியில் உள்ள சுப்புராமன், ஜனார்த்தனன் ஆகியோரது வீடுகளில் இரவில் மர்மநபர்கள் வீட்டுக்கதவின் பூட்டை உடைத்து பொருட்களை திருடி சென்று உள்ளனர். இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிந்தாமணி வடக்குத்தெருவை சேர்ந்த மாடசாமி மகன் மணிகண்டன் (வயது 19) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், மணிகண்டன் கட்டிட தொழிலாளி வேலை செய்து வந்ததும், அவர் வேறு சிலருடன் சேர்ந்து இரவு நேரங்களில் ஆளில்லாத வீடுகளில் புகுந்து பொருட்களை திருடியதையும் ஒப்புக் கொண்டார். இதையடுத்து மணிகண்டனுடன் சேர்ந்து வீடுகளில் கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.