வயல்களில் மின் மோட்டார்கள் திருடிய வாலிபர் கைது
வயல்களில் மின் மோட்டார்கள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டது.
லால்குடி:
லால்குடியை அடுத்த நத்தமாங்குடி பகுதியில் வயல்களில் விவசாயத்துக்கு பயன்படுத்திய மின் மோட்டார்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 6 மின்மோட்டார்கள் திருட்டு போயின. இது குறித்து விவசாயிகள் லால்குடி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் மின் மோட்டார்களை திருடியவர் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் ஏலாக்குறிச்சியை சேர்ந்த ராசுவின் மகன் வீரக்குமார்(வயது 27) என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வீரக்குமாரை கைது செய்தனர்.