மின்மோட்டார் திருடிய வாலிபர் கைது

காந்திநகரில் மின்மோட்டார் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-06-03 11:31 GMT

காட்பாடி

காட்பாடி காந்திநகரை சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது வீட்டில் இருந்த மின்மோட்டார் மற்றும் பாய்லரை கடந்த மாதம் 24-ந்தேதி மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாக விருதம்பட்டு போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதுகுறித்து அப்பகுதியில் இருந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். இந்தநிலையில் சில்க்மில்க் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்தவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் காந்திநகர் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 29) என்பதும், மின் மோட்டரை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்