கடையில் செல்போன்கள் திருடிய வாலிபர் கைது
தேனியில் கடையில் செல்போன்கள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தேனியை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 34). இவர் பழைய போஸ்ட் ஆபீஸ் ஓடைத் தெருவில் செல்போன் கடை வைத்துள்ளார். அவர் நேற்று முன்தினம் கடையை பூட்டி விட்டு சென்றுவிட்டார்.
நேற்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கடையில் இருந்த 4 செல்போன்கள் திருடு போயிருந்தது. இதையடுத்து அதே பகுதியில் உள்ள ஒரு டீக்கடை அருகில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிரேம்குமார் தனது நண்பருடன் சேர்ந்து பிடித்து விசாரித்தார்.
அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது அதற்குள் திருடு போன 4 செல்போன்களும் இருந்தன. இதையடுத்து அவரை தேனி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர் பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்த குமரகுருபரன் மகன் சந்தீப்கிருஷ்ணா (19) என்பது தெரியவந்தது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.