திண்டிவனம் கடையில் செல்போன்களை திருடிய வாலிபர் கைது

திண்டிவனம் கடையில் செல்போன்களை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-18 18:45 GMT

திண்டிவனம், 

திண்டிவனம் போலீசார் திண்டிவனம் ரெயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் வந்த பஸ்சில் இருந்து இறங்கிய வாலிபர், போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சிநகரை சேர்ந்த பன்னீர் மகன் கண்ணப்பன்(வயது 21) என்பதும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திண்டிவனம் நேரு வீதியில் உள்ள அசைன்(32) என்பவருக்கு சொந்தமான செல்போன் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 25 செல்போன்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், கண்ணப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்