இறைச்சி கடையில் வைத்திருந்த 12 பவுன் நகைகளை திருடிய வாலிபர் கைது

கரூர் அருகே இறைச்சி கடையில் வைத்திருந்த 12 பவுன் நகைகளை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-11 19:10 GMT

12 பவுன் நகைகள் மாயம்

கரூர் தாந்தோணிமலை முத்தலாடம் பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 39). இவர் காளியப்பனூர் அருகே இறைச்சி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் பழனிசாமி தனது சொந்த தேவைக்காக வீட்டில் இருந்த தங்கச்சங்கிலி உள்பட 12 பவுன் நகைகளை வங்கியில் அடகு வைப்பதற்காக எடுத்து வந்து இறைச்சி கடையில் வைத்திருந்தார்.

பின்னர் கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து பழனிசாமி வந்து பார்த்தபோது, 12 பவுன் நகைகள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து பழனிசாமி கொடுத்த புகாரின்பேரில், தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

வாலிபர் கைது

விசாரணையில், 12 பவுன் நகைகளை திருடியது இறைச்சி கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து சென்ற சேலம் மாவட்டம், ஆத்தூர் மீனவதெருவை சேர்ந்த டிரைவர் சக்தி என்கிற சத்தியசீலன் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து சக்தி என்கிற சத்தியசீலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்