தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது

தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-22 18:24 GMT

ஆம்பூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 31). ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அதே பகுதியில் முதியவர் ஒருவர் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். அவரின் இறுதி ஊர்வலம் நடந்தது. அதே பகுதியைச் சேர்ந்த சாமுவேல் (21) என்பவரும் இறுதி ஊர்வலத்தில் சென்றார். அப்போது சிவகுமாருக்கும், சாமுவேலுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

ஆத்திரமடைந்த சாமுவேல் தான் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் சிவகுமாரை சரமாரியாக குத்தினார். இதில் சிவகுமார் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிவகுமார் அளித்த புகாரின் பேரில் ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து சாமுவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்