(செய்திசிதல்) நிதி நிறுவன ஊழியரிடம் 2½ பவுன் சங்கிலி பறித்த வாலிபர் கைது
நிதி நிறுவன ஊழியரிடம் 2½ பவுன் சங்கிலி பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நிதி நிறுவன ஊழியரிடம் 2½ பவுன் சங்கிலி பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நிதி நிறுவன ஊழியர்
திருவெறும்பூர் அருகே காட்டூரை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 31). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரும், இவரது நண்பர் ஒருவரும் நேற்று முன் தினம் மாலை பொன்மலை கம்பிகேட் டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பொன்மலை கணேசபுரத்தை சேர்ந்த பாலாஜி (24) ஆலத்தூரை சேர்ந்த மாதவன் ஆகியோர் விக்னேஷிடம் மது அருந்துவதற்காக பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் அவர் பணம் கொடுக்க மறுத்ததால் விக்னேஷின் கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர். தப்பி ஓடிய மாதவனை தேடி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம்
*அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிப்பை கண்டித்து மண்ணச்சநல்லூரில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்து கோஷமிட்டனர்.
விபசாரம்
*திருச்சி கருமண்டபம் சோழன்நகரில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அதிகாலை போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினார்கள். அப்போது சோழன்நகர் 1-வது கிராசில் உள்ள ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்திய பொன்மலைப்பட்டியை சேர்ந்த வினோத்குமார் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அந்த வீட்டில் இருந்து திருப்பூரை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணும், தர்மபுரியை சேர்ந்த 26 வயது பெண்ணும் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அந்த வீட்டில் இருந்து ஒரு செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.
பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டவர் கைது
*திருச்சி உய்யகொண்டான் திருமலை பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் என்கிற சிவானந்தம் (44). கூலி தொழிலாளியான இவருக்கும் பக்கத்து வீட்ைட சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் இடையே நில பிரச்சினை இருந்து வந்தது. நேற்று மதியம் ஆனந்த் என்கிற சிவானந்தம் குடித்து விட்டு கண்ணன் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு தகாத வார்த்தையில் திட்டி உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்த் என்கிற சிவானந்தத்தை கைது செய்தனர்.