புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது
திருக்கோவிலூர் அருகே புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள மணம்பூண்டியில் அரகண்டநல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் அவர் ஓதியத்தூர் கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 30) என்பதும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1500 புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமதல் செய்தனர்.